டெல்லி: டெல்லியில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தி வருகிறார். நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். நீட் தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்து நாளை நாடு தழுவிய போராட்டம் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே பல மாநிலங்களில் நீட் எதிர்ப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் காங்கிரஸ் போராட்ட அறிவிப்பால் ஒன்றிய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
The post நீட் தேர்வு ரத்தாகுமா? – ஒன்றிய அமைச்சர் ஆலோசனை appeared first on Dinakaran.