×

கடலுக்கு சென்று உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி: கலெக்டர் வழங்கினார்

ராமேஸ்வரம், ஜூன் 20: ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று உயிரிழந்த பாம்பன் மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது. பாம்பன் அன்னை நகரைச் சேர்ந்த மீனவர்கள் பரக்கத்துல்லா, ஆரோக்கியம், கலீல் முஹமது ஆகிய மூன்று பேர் கடந்த 14ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது படகில் ஏற்பட்ட பிரச்னையால், கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.3 லட்சம் வழங்க நேற்று முன்தினம் முதலமைச்சர் உத்தவிட்டார்.

அதற்கான நிவாரண உதவி தொகைக்கான காசோலையினை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், மற்றும் எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் பாம்பனுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் காசோலையினை வழங்கி ஆறுதல் கூறினர். இதில் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் சிவக்குமார், ஜெய்லாணி மற்றும் வட்டாட்சியர் வரதராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கடலுக்கு சென்று உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Pamban ,Mandapam ,Barakatullah ,Sangalli ,Khalil Muhammad ,
× RELATED ராமேஸ்வரம் பாம்பன் புதிய பாலம்: 2மாதத்தில் ரயில் சோதனை ஓட்டம்