×

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு..!!

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை சில நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது. இதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்றம் அவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. அதன்படி டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

பின்னர் தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என உத்தரவிட வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும்போது தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. பின்னர் 2ம் தேதி மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் விசாரணை நீதிமன்றம் அவரது நீதிமன்ற காவலை ஜூலை 3ம் தேதி வரை நீடித்துள்ளது. மருத்துவ பரிசோதனைக்காக இடைக்கால ஜாமினை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்த நிலையில், உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது. மேலும் ஜாமின் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Chief Minister Kejriwal ,Enforcement Department ,
× RELATED கெஜ்ரிவால் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு