×

காங்கிரஸ் பெண் எம்எல்ஏ, மகள் பாஜகவில் ஐக்கியம்: அரியானாவில் பரபரப்பு

சண்டிகர்: அரியானா காங்கிரஸ் பெண் எம்எல்ஏ மற்றும் அவரது மகள் ஆகியோர் இன்று பாஜகவில் இணைந்தனர். அரியானா மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ேகபினட் அமைச்சரும், மாநில சட்டமன்ற காங்கிரஸ் தலைவருமான (எம்எல்ஏ) கிரண் சவுத்ரி மற்றும் அவரது மகளும், பிவானி-மகேந்திரகர் மக்களவை முன்னாள் உறுப்பினருமான ஸ்ருதி சவுத்ரி ஆகியோர் இன்று அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

முன்னதாக நேற்று இருவரும் காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து ராஜினாமா செய்தனர். அரியானாவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளான தாயும், மகளும் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post காங்கிரஸ் பெண் எம்எல்ஏ, மகள் பாஜகவில் ஐக்கியம்: அரியானாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : MLA ,Unity ,Bajaga ,Ariana ,CHANDIGARH ,Congress ,BJP ,Cabinet Minister ,State Assembly Congress ,Speaker ,Kiran Choudhry ,Bajaka ,
× RELATED சமாஜ்வாடி எம்எல்ஏவை சுட்டு கொன்ற பாஜ...