×

சுசீந்திரம் கோயிலில் ₹8.22 லட்சம் உண்டியல் காணிக்கை

சுசீந்திரம், ஜூன் 19 : சுசீந்திரத்தில் பிரசித்தி பெற்ற தாணுமாலய சுவாமி கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோயிலில் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது.

கோயில் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், உதவி ஆணையர் தங்கம், கோயில் கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் முன்னிலையில் கோயில் ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ₹8 லட்சத்து 22 ஆயிரத்து 563 ரொக்கப்பணம்,19 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் காணிக்கையாக கிடைத்தன.

The post சுசீந்திரம் கோயிலில் ₹8.22 லட்சம் உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Suchindram Temple ,Susindram ,Thanumalaya Swamy Temple ,Sami ,Suseendram Temple ,
× RELATED மேலகிருஷ்ணன்புதூர் அருகே கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது