×

பூஜா ஹெக்டே ரகசிய காதல்

இந்தியில் சல்மான்கான், பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்துள்ள படம், ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’. இதில் நடிக்கும்போது, சல்மான்கானுடன் பூஜா ஹெக்டே டேட்டிங் செய்வதாக தகவல் வௌியானது. இதுகுறித்து பூஜா ஹெக்டே கூறுகையில், ‘சல்மான்கானுடன் நான் டேட்டிங் செய்வதாக வெளியான செய்திகளைப் படித்தேன்.

அந்த தகவல்களில் உண்மை இல்லை. இப்போது தனியாக இருக்கிறேன். எப்போதும் தனியாக இருக்கவே விரும்புகிறேன்’ என்றார். 57 வயதான சல்மான்கானுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. ஏற்கனவே பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட அவர், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி தன்னைப் பரபரப்பாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துகிறார்.

இந்நிலையில் சல்மான்கானுக்கும், பூஜா ஹெக்டேவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ படத்தை சல்மான்கான் தயாரித்துள்ளார். அடுத்து தயாரிக்கும் படத்திலும் பூஜா ஹெக்டேவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளார். இதனால், அவர்கள் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக பாலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. இதை பூஜா ஹெக்டே மறுத்துள்ளார்.

The post பூஜா ஹெக்டே ரகசிய காதல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Pooja Hegde ,Salman Khan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சூரத் ஆற்றில் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் சிக்கின..!!