×

இருசக்கர வாகனங்களில் தனியாக வருபவர்களிடம் வழிப்பறி: தூத்துக்குடியில் இரவு நேரங்களில் தனியாக வர மக்கள் அச்சம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் தனியாக செல்வோரை குறிவைத்து மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தூத்துக்குடி துறைமுகம் மற்றும் அனல் மின் நிலையங்களுக்கு இரவு நேரங்களில் வேலைக்கு செல்வோர் இரு சக்கர வாகனங்களில் செல்வது வழக்கம் இதே போன்று திருச்செந்தூர் சாலையிலும் வேலை நிமித்தமாக இரவு நேரங்களில் பலர் தனியாக இரு சக்கர வாகனங்களில் சென்று வருவர்.

முத்தையாபுரம் முப்பாற்று ஓடைப்பாலம் முதல் துறைமுக சாலை சிப்காட் மேம்பாலம் வரை போதிய விண்விளக்கு வசதி இல்லை இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் இருசக்கர வாகனங்களில் வருபவர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் இருசக்கர வாகனத்தில் வந்த லாரி ஓட்டுனரின் செல்போனை பறிக்க முயன்ற மர்ம கும்பல் அவரை கீழே தள்ளியபோது பதிவான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மர்மகும்பல்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இருசக்கர வாகனங்களில் தனியாக வருபவர்களிடம் வழிப்பறி: தூத்துக்குடியில் இரவு நேரங்களில் தனியாக வர மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Tuticorin ,
× RELATED தூத்துக்குடியில் மீனவர் பைக் எரிப்பு