×

தார் சாலை பணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் தார் சாலை போடும் பணிக்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. கந்தர்வகோட்டை பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி பஞ்சநாதன் என்பவர் ஐகோர்ட் கிளை மனு தாக்கல் செய்திருந்தார். நீர் செல்லும் வழித்தடத்தில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதா என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைக்கும் பணி எதுவும் நடைபெறவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post தார் சாலை பணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Madurai ,Court ,Kandarvakottai ,Pudukottai district ,Panchanathan ,ICourt Branch ,
× RELATED கட்டணத்தை உயர்த்தினாலும் முறையாக...