×

ஜாதகம் சரியில்லை என்றதால் கல்லூரி மாணவி தற்கொலை

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூரைச் சேர்ந்தவர் சினேகா(23). இவர் வாணியம்பாடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் சினேகாவின் பெற்றோர் உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு நேற்று காலை வீடு திரும்பினர். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் புடவையால் சினேகா தூக்கில் தொங்கியபடி கிடந்தார். அவரை மீட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சினேகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த அம்பலூர் போலீசார் சம்பவ இடம் வந்து, சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில் சினேகாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அதன்படி சமீபத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்து சென்றுள்ளனர். அவர்கள் சினேகாவின் ஜாதகம் சரியில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் சினேகா மனவேதனையில் இருந்துள்ளார். நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சினேகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஜாதகம் சரியில்லை என்றதால் கல்லூரி மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Vaniyampady ,Sneha ,Chinnamotour ,Tirupathur district ,Vaniyambadi ,
× RELATED வாணியம்பாடி அருகே நள்ளிரவு பைக் மீது...