×

மேகதாது அணை குறித்து பேச்சு நடத்த இடமளிக்கக்கூடாது: டிடிவி தினகரன்

சென்னை: தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது என்று அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலத்துக்கும் பொதுவான ஒன்றிய நீர்வளத் துறை இணையமைச்சர் கர்நாடக ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. மேகதாது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்கள் பேச்சு நடத்த வேண்டும் என அமைச்சர் கூறியது அதிர்ச்சி அளிக்கிறது. மேகதாது அணை குறித்த அமைச்சர் சோமண்ணாவின் பேச்சு தமிழ்நாடு விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

The post மேகதாது அணை குறித்து பேச்சு நடத்த இடமளிக்கக்கூடாது: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Tags : Megadhat ,Dam ,DTV Dinakaran ,Chennai ,AMUKA Party ,General ,DTV ,Dinakaran ,Megadadu Dam ,Tamil Nadu ,EU Water Resources Department ,Internet Minister ,Karnataka ,Megadhat Dam ,
× RELATED மேகதாது அணை பற்றி பேச்சு நடத்த...