×

ஆக்கிரமிப்பு இடத்திற்கு மாறாக வேறு ஒருவரின் குடியிருப்பு அகற்றம்: அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன் அமராவதி அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்திற்கு மாறாக வேறு ஒருவரின் குடியிருப்பை அகற்றி அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். பொன் அமராவதி அடுத்த மலையாண்டி கோவில் பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக அறநிலையதுறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை அடுத்து ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான நோட்டீஸ் முறைப்படி வழங்காத அதிகாரிகள் ராஜா என்பவரது வசிப்பிடத்திற்கு பொக்லைன் இயந்திரத்துடன் சென்றுள்ளனர்.

அப்போது ராஜாவுக்கு சொந்தமான குடியிருப்பை முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கிய அவர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் கட்டுமானம் இடித்து அகற்றப்பட்டதாக நோட்டீஸ் வழங்கிவிட்டு சென்றுள்ளனர். ஆனால் அந்த நோட்டீசை பார்த்த போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கும் சர்வே எண்ணும் தனக்கு சொந்தமான இடத்தின் சர்வே எண்ணும் வேறு என்பதை அறிந்து அதிர்ச்சியுற்ற ராஜா அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் குடியிருப்பு கட்டுமானத்தை முழுவதுமாக இடித்து அகற்றிய அதிகாரிகள் பதில் ஏதும் அளிக்காமல் அங்கிருந்து சென்றுள்ளனர். அலட்சியமாக செயல்பட்டு சுமார் லட்சம் மதிப்பிலான குடியிருப்பை இடித்து அகற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜாவும் அப்பகுதி மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

The post ஆக்கிரமிப்பு இடத்திற்கு மாறாக வேறு ஒருவரின் குடியிருப்பு அகற்றம்: அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Pon Amaravati ,Malayandi ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலை...