×

போக்குவரத்து விதிகளை மதிக்ககோரி காவல்துறை சார்பில் வாகன விழிப்புணர்வு பேரணி

 

கும்பகோணம், ஜூன்18: கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் காவல்துறை சார்பில் போக்குவரத்து விதிகளை பொதுமக்கள் மதிக்க வலியுறுத்தி வாகன பேரணி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் காவல்துறை சார்பில் பாபநாசம் காவல் டிஎஸ்பி அசோக் மேற்பார்வையில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார் கபிஸ்தலம் பகுதியில் பொதுமக்கள் சாலை போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கவும், ஹெல்மெட் அணிய வலியுறுத்தியும், ஹெல்மெட் அணிந்து காவலர்கள் இருசக்கர வாகன பேரணி நடத்தினர்.

பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும், வாகனத்தில் வாகன உரிமம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும் எனவும், அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தி நடைபெற்ற இந்த பேரணி கபிஸ்தலம் பாலக்கரை இருந்து முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் கபிஸ்தலம் பாலக்கரை வந்தடைந்தது. கபிஸ்தலம் காவல் நிலையத்தை சார்ந்த அனைத்து காவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post போக்குவரத்து விதிகளை மதிக்ககோரி காவல்துறை சார்பில் வாகன விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Kapisthalam ,Thanjavur ,District ,Kapistalam police ,DSP ,Ashok ,Inspector ,Mahalakshmi ,
× RELATED கும்பகோணத்தில் பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்து!!