×

புதுக்கோட்டையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

 

புதுக்கோட்டை, ஜூன் 18: இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்எம் அப்துல்லா உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி ஒன்றிணைந்து தொழுகையில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை நேற்று நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக ஈகை பெருநாள் என்று சொல்லக்கூடிய பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி ஒன்றிணைந்து தொழுகையில் ஈடுபட்டு அனைவரும் நலமுடன் வாழ வேண்டி துவா செய்து பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்த தொழுகையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்எம் அப்துல்லா கலந்து கொண்டார். மேலும் இதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.

The post புதுக்கோட்டையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை appeared first on Dinakaran.

Tags : Bakrit ,Pudukottai ,DMK Rajya Sabha ,MM Abdullah ,Pudukottai Eidka ,Muslims ,Bakrit festival ,
× RELATED புதுக்கோட்டை அருகே என்கவுன்டரில்...