×

காஞ்சிபுரத்தில் பக்ரீத் பண்டிகை கோலாகலம்: 9 இடங்களில் சிறப்பு தொழுகை

காஞ்சிபுரம்: பக்ரீத் பண்டிகையையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் நசரத்பேட்டை ஷேக் முஹம்மது அலி ஜூம்மா மஸ்ஜித், ஓரிக்கை ஜூம்மா மஸ்ஜித், மதீனா மஸ்ஜித் ஒலி முஹம்மது பிஎஸ்கே தெரு இஸ்பந்தியர் ஜூம்மாமஸ்ஜித், கீழ்க்கேட் காமாட்சி காலனி மஸ்ஜித், வைகுண்ட பெருமாள் கோயில் தெரு சாதத்துல்லா கான் ஜூம்மா மஸ்ஜித், ரெட்டிப்பேட்டை ஹமிதியா மதர்ஸா மஸ்ஜீத்,

ஒலிமுஹம்மதுபேட்டை ஜண்டா மஸ்ஜித் ஈத்கா திடல் தொழுகை, அரக்கோணம் ரோடு மக்கா ஜூம்மா மஸ்ஜித், நியமத்துல்லா நகர் மஸ்ஜித், தே காதிர் ஜூம்மா மஸ்ஜித், திருக்காளிமேடு காசிம் நகர் ஜூம்மா மஸ்ஜித், செவிலிமேடு ஜூம்மா மஸ்ஜித், காந்தி ரோடு கைருல்லா ஜூம்மா மஸ்ஜித் ஆகிய இடங்களில் சிறப்பு தொழுகை நேற்று காலை 8 மணிக்கு நடத்தப்பட்டது. இதில், காஞ்சிபுரம் வெள்ளகுளம் பள்ளிவாசலில் திரளான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பக்ரீத் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.

பக்ரீத் பண்டிகையையொட்டி, காஞ்சிபுரம் ஒலிமுகம்மதுபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி மைதானத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறப்பு தொழுகை நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் கிளையின் தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் யூசுப், மருத்துவ அணி நிர்வாகி சர்புதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் அன்சாரி அனைவரையும் வரவேற்று பேசினார்.

இதில், மாநில பேச்சாளர் தவ்ஹீத் பங்கேற்று பேசுகையில், இப்ராஹிம் நபிகளின் சேவை மனப்பான்மை, கொள்கை பிடிப்பு ஆகியன குறித்து தொடர்ந்து 10 மாதங்களுக்கு பிரச்சாரம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இப்பண்டிகை நாளில் இப்ராஹிம் நபியைப்போன்று கொள்கைப்பிடிப்போடு வாழ, அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றார். இந்த சிறப்பு தொழுகையில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களும் திரளான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, தொழுகையில் பங்கேற்றதுடன் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர்.

நிறைவாக ஊடக பொறுப்பாளர் சுபேதார் நன்றி கூறினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம், மாங்காடு, குன்றத்தூர், படப்பை, பட்டூர், வஞ்சுவாஞ்சேரி, முசரவாக்கம், நடுவீரப்பட்டு, ஒலிமுகம்மதுபேட்டை ஆகிய 9 இடங்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

The post காஞ்சிபுரத்தில் பக்ரீத் பண்டிகை கோலாகலம்: 9 இடங்களில் சிறப்பு தொழுகை appeared first on Dinakaran.

Tags : Bakrit festival ,Kanchipuram ,Bakrit ,Nasaratpet ,Sheikh ,Muhammad ,Ali ,Jumma Masjid ,Orikai Jumma Masjid ,Madina Masjid… ,
× RELATED தியாகத்திற்கு ஒரு திருநாள்…!