×

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மோடி சந்திப்பு

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன். இந்தியா வந்துள்ள அவர் நேற்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து நேற்று பிரதமர் மோடியை ஜேக் சல்லிவன் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர். இதுபற்றி பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில்,’ அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் என்னை சந்தித்தார். உலக நன்மைக்காக இந்தியா-அமெரிக்கா விரிவான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது’ என்று குறிப்பிட்டார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கியமான தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு, குறைக்கடத்தி, மேம்பட்ட தொலைத்தொடர்பு, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் சுத்தமான ஆற்றல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஆலோசிக்கப்பட்டது.

The post அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மோடி சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,US ,National Security ,New Delhi ,National Security Adviser ,Jack Sullivan ,India ,National Security Advisor ,Ajit Doval ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது...