×

வீட்டு வாசலில் நிறுத்திய 2 பைக்குகள் எரிந்து நாசம்

வேளச்சேரி: மேடவாக்கத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த 2 பைக்குகள் எரிந்து நாசமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேடவாக்கம், அன்னப்பூரணி தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (77). மனைவி, மகள் ஆகியோருடன் வசித்து வரும் இவர், வீட்டின் கார் பார்க்கிங்கில் தனது 2 பைக்குகளை நிறுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு பாலசுப்பிரமணியத்தின் 2 பைக்குகள் திடீரென்று எரிந்து கொண்டிருந்தன. சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது பைக்குகள் முழுவதுமாக எரிந்து கிடந்தன. இதனைகண்டு, அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டு வாசலில் நிறுத்திய 2 பைக்குகள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Medavakkam ,Balasubramanian ,Annapurani Street, Medavakkam ,
× RELATED சகோதரியுடன் சொத்து தகராறு; தண்ணீர்...