×

ராஜ்பவனில் உள்ள போலீசார் உடனே வெளியேற மேற்கு வங்க ஆளுநர் உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தபோசுக்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே பல விஷயங்களில் மோதல் இருந்து வருகிறது. மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து கொண்டு மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி மாநில ஆளுநர் மாளிகைக்கு சென்றார். ஆனால் ஆளுநர் மாளிகையின் அருகே 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அந்த பகுதியில் கூட்டம் கூடுவதற்கு அனுமதி இல்லை என்று கூறி அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

இந்த நிலையில் ராஜ் பவனில் உள்ள போலீஸ் அதிகாரிகள் உடனே வெளியேற வேண்டும் என ஆளுநர் நேற்று உத்தரவிட்டுள்ளார். ராஜ் பவனுக்குள் இருக்கும் போலீஸ் பொறுப்பு அதிகாரி உட்பட அனைவரும் ராஜ்பவன் வளாகத்தை விட்டு வெளியேற அவர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் ஆளுநர் மாளிகைக்கு வெளியே உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்தை பொதுமக்களின் மேடை ஆக மாற்ற திட்டமிட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

The post ராஜ்பவனில் உள்ள போலீசார் உடனே வெளியேற மேற்கு வங்க ஆளுநர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Governor ,Raj Bhavan ,Kolkata ,Ananda Bose ,Chief Minister ,Mamata Banerjee ,Lok Sabha elections ,Suvendu Adhikari ,
× RELATED ராஜ்பவன் செல்ல பெண்கள் அச்சம் ஆளுநர்...