×

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை: மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் சோமண்ணா பேசியதற்கு பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். நடு நிலையாக இருந்து இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனையை தீர்க்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது. கர்நாடகத்தை சேர்ந்த சோமண்ணாவை ஜன்சக்தி அமைச்சராக நியமித்திருப்பது தமிழகத்திற்கு செய்த மாபெரும் துரோகம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகள் காவிரி மற்றும் மேகதாது அணை பிரச்சனையில் தொடர்ந்து கபட நாடகமாடி வருவதை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு துரோகம் செய்து வருவது ஏற்கத்தக்கதல்ல. தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் நடுநிலையாக இருந்து பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டிய மத்திய அரசு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சோமண்ணாவை ஒன்றிய ஜல்சக்தித் துறை இணை அமைச்சராக நியமித்திருப்பது தமிழகத்திற்கு செய்த மாபெரும் துரோகமாகும்.

ஏற்கனவே காவிரி மேகதாது பிரச்சனையில் தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கிடையே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டிய மத்திய அமைச்சர் மேகதாது பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பேசியதாக ஊடகங்களில் வந்த செய்தி டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

The post மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : EDAPPADI PALANISAMI ,UNION ,MINISTER ,TAMIL NADU ,KARNATAKA ,MEGADATHU ,Chennai ,Palanisami ,Union Minister ,Somanna ,Megadadu ,EU ,Eadapadi Palanisami ,
× RELATED பாலாற்றின் குறுக்கே தடுப்பணை...