×

மண்டபம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

மண்டபம்: மீன்பிடி தடைகாலம் முடிந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் துறைமுகத்தில் இருந்து, கடந்த 14ம் தேதி 540க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இதில், மண்டபம் சேது நகரைச் சேர்ந்த சுதர்சன் எனபவரின் படகு சேதம் அடைந்து கடலில் மூழ்கியது. இதில் இருந்த 5 மீனவர்களில் 3 மீனவர்கள் கடலில் மூழ்கி மாயமாகினர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டு கரை சேர்ந்தனர். இது குறித்த புகாரின்பேரில், மண்டபம் கடலோரப் பாதுகாப்பு படை போலீசார் கடலில் மாயமான மீனவர்களை தேடினர்.

இதில், 2 மீனவர்கள் இறந்த நிலையில், அவர்களின் உடல்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதில், மாயமான பாம்பனைச் சேர்ந்த கலீல் முகமது என்ற மீனவர் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில், கலீல் முகமதுவை தீவிரமாக தேட வலியுறுத்தியும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரியும், மண்டபம் பகுதி மீனவர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை இன்று தொடங்கினர். இதனால், மண்டபம் வடக்கு கடலோரப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு கடலில் நிறுத்தப்பட்டுள்ளன.

The post மண்டபம் மீனவர்கள் வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Mandapam harbor ,Ramanathapuram district ,Sudarsan ,Mandapam Sethu ,Mandapam fishermen ,Dinakaran ,
× RELATED நீதியை நிலைநாட்டிய மனுநீதி சோழனின்...