×

பணியிட மாறுதல் செய்யப்பட்டதால் அதிகளவு மாத்திரைகள் சாப்பிட்டு சார்பதிவாளர் தற்கொலை முயற்சி

அண்ணாநகர்: அதிகளவு மாத்திரைகள் தின்று மதுராந்தகம் சார்பதிவாளர் தற்கொலைக்கு முயன்றது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருமங்கலம் 2வது அவென்யூவை சேர்ந்தவர் கணேசன்(33). இவர் மதுராந்தகத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு கணேசன் அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து வீட்டில் உள்ளவர்கள், அவரை மீட்டு உடனே தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், ‘’அதிகளவு மாத்திரைகளை சாப்பிட்டுள்ளதால் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்’ என்று தெரிவித்தார். இதையடுத்து அங்கு பரிசோதனை செய்த போது அதிகளவு மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து மருத்துவமனையில் இருந்து திருமங்கலம் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதுபற்றி திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து கணேசனிடம் விசாரணை நடத்தினர்.கடந்த 2 மாதத்துக்கு முன்பு கணேசனுக்கு திருப்போரூரில் பணிமாறுதல் வந்துள்ளது. இதனால் 2 நாட்களாக மன வேதனையில் இருந்துள்ளார். இதன்காரணமாக அதிக அளவில் மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்’ என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் பணி மாறுதல் செய்ததால் மன வேதனையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா, குடும்ப பிரச்னையா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பணியிட மாறுதல் செய்யப்பட்டதால் அதிகளவு மாத்திரைகள் சாப்பிட்டு சார்பதிவாளர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Madhuranthakam ,Chennai ,Ganesan ,2nd Avenue, Thirumangalam, Chennai ,
× RELATED குளித்தலை அண்ணாநகர் புறவழிச்...