×

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்

பெய்ஜிங்: காதலுக்கு வயது எந்த தடையும் இல்லை என்று நிரூபித்துள்ளார் 23 வயது சீன இளம் பெண். முதியோர் இல்லத்தில் தான் சந்தித்த 80 வயது தாத்தாவை அவர் காதலித்து மணந்தது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்கு கண் இல்லை என்பார்கள். காதலுக்கு அழகு முக்கியமில்லை, வயதும் தடை இல்லை என்கிறார் சீனாவை சேர்ந்த ஜியான்பாங் என்ற 23 வயது சீன இளம்பெண். இவர் சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வேலை பார்த்து வருகிறார்.

அங்கு 80 வயதான லீ என்ற தாத்தா அந்த முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார். லீயின் பேச்சு, நடவடிக்கை ஜியான்பாங்கை வெகுவாக கவர்ந்தது. விளைவு, அவர்களிடையே நட்பு துளிர்த்தது. லீயின் முதிர்ச்சி, அறிவு, ஞானத்தை கண்டு அவரை காதலிக்க துவங்கினார் ஜியோ பாங். அதே நேரத்தில் ஜியான்பாங்கின் கனிவான நடத்தை, இளமை துடிப்பை கண்டு லீ தாத்தா கிறங்கினார். இருவரிடையேயான நட்பு காதலாக மாறியது.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இது பற்றி தனது குடும்பத்தினரிடையே இளம்பெண் ஜியோபாங் தெரிவிக்க, கிளம்பியது எதிர்ப்பு. 80 வயது தாத்தாவுடன் திருமணம் செய்து வைக்க முடியாது என்று அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க, வீட்டை விட்டு வெளியேறினார் ஜியோபாக். இதையடுத்து, அண்மையில் நடந்த எளிய விழாவில் 80 வயது லீ, 23 வயது ஜியான்பாக் காதல் ஜோடியின் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்ததும் இருவரும் போஸ் கொடுத்து எடுத்த போட்டோக்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஜியான்பாங் மற்றும் லீயின் காதல் கதை சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பணத்திற்காக ஒரு வயதானவரை திருமணம் செய்து கொண்டதாக இளம்பெண் மீது பலர் குற்றம் சாட்டினர், அதே நேரத்தில் அவரது தைரியம் மற்றும் லீ மீதான அன்பிற்காக பலர் அவளைப் பாராட்டினர். கணவர் லீ என் அருகில் இருந்தால் போதும் எதையும் சாதித்து காட்டுவேன் என்று இளம்பெண் ஜியான்பாங் கூறியுள்ளார்.

The post காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண் appeared first on Dinakaran.

Tags : Love ,Beijing ,China ,
× RELATED நிலவின் மாதிரிகளை சேகரித்து கொண்டு...