×

முத்துப்பேட்டை பேரூராட்சி 17-வது வார்டில் கூடுதல் மின்னழுத்த புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கம்

 

முத்துப்பேட்டை, ஜூன் 16: முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு காமண்டியடி தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் பல ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்த மின்விநியோகம் இருந்து வந்தது. குறைந்த மின் அழுத்த குறைபாட்டின் காரணமாக அனைத்து வீடுகளிலும் மின் விளக்குகள் வெளிச்சமில்லை. இதேபோல வீடுகளில் எந்த மின்சார உபயோக பொருள்களும் இயங்காமல் இருந்தன. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

கடந்த 10ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு கண்டுக்கொள்ளவே இல்லை. இதனால் இப்பகுதியில் கூடுதல் மின் அழுத்த டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் அப்பகுதி திமுக கவுன்சிலர் தமிழழகன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து கூடுதல் மின் அழுத்த டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி கவுன்சிலர் தமிழழகன் தலைமை வகித்தார். முத்துப்பேட்டை உதவி செயற்பொறியாளர் மணிதாஸ் முன்னிலை வகித்தார். திருத்துறைப்பூண்டி மின்வாரிய செயற்பொறியாளர் பிரபு இயக்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் போர்மேன் கார்த்தி மற்றும் மின்வாரிய பணியாளர்கள் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

The post முத்துப்பேட்டை பேரூராட்சி 17-வது வார்டில் கூடுதல் மின்னழுத்த புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Muthupet Municipality 17th Ward ,Muthuppet ,Ward ,Muthupet ,Kamandiyadi Street ,Municipality 17th Ward ,Dinakaran ,
× RELATED முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில்...