×

ஆறு ஓவரில் ஆட்டம் ‘க்ளோஸ்’: நொந்துப் போன நியூசிலாந்துக்கு முதல் வெற்றி


டரூபா: ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 32வது லீக் ஆட்டத்தில் நேற்று அனுபவ அணியான நியூசிலாந்து, அறிமுக அணியான உகாண்டா ஆகியவை மோதின. சி பிரிவில் உள்ள இந்த 2 அணிகளும் மோதிய ஆட்டம் டிரினிடாட்டில் உள்ள டரூபா நகரில் நடந்தது. இந்த 2 அணிகளும் ஏற்கனவே சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டன. இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாத நியூசி முதல் வெற்றிக்காக உகாண்டாவை எதிர் ெகாண்டது. உகாண்டா ஏற்கனவே ஒரு வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் எல்லா அணிகளும் செய்வது போல் டாஸ் வென்ற நியூசி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனையடுத்து களம் கண்ட உகாண்டா ரன் எடுக்க திணறினாலும் விக்கெட்களை எளிதில் விட்டுவிடவில்லை. தொடக்க ஆட்டக்காரர் ரோனக் படேல் 20பந்துகளை சந்தித்து 2ரன்னில் ஆட்டமிழந்தார். கூடவே 4பேர் டக் அவுட்.

எனினும் 18.4ஓவர் வரை தாக்குப்பிடித்த உகாண்டா உலக கோப்பையின் குறைந்தபட்ச ஸ்கோரான 40ரன்னில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கென்னத் 11(18பந்து, 2பவுண்டரி) ரன் எடுத்தார். நியூசி வீரர்கள் சவுத்தீ 3, போல்ட், சான்ட்னர், ரச்சின் தலா 2 விக்கெட் எடுத்தனர். அதனையடுத்து 40ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகமிக எளிய இலக்குடன் நியூசி களமிறங்கியது. அந்த அணியின் பின் ஆலன் 9(17பந்து, 1பவுண்டரி) ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஆனாலும் டெவன் கான்வே 22(15பந்து, 4பவுண்டரி), ரச்சின் ரவீந்திரா 1(1பந்து) ரன் எடுத்து அணியை கரை சேர்த்தனர். அதனால் நியூசி 5.2ஓவரில் 41ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. நேபாளத்தின் அலி ஷா ஒரு விக்கெட் எடுத்தார்.

நடப்புத் தொடரில் பவர் பிளேவான 6 ஓவருக்குள் இலக்கை எட்டி சாதனைப் படைத்த 3வது அணியாக நியூசி திகழ்கிறது. ஏற்கனவே ஆஸ்திரலேியா 5.4ஓவரில் நமீபியாவையும், இங்கிலாந்து 3.1ஓவரில் ஓமனையும் வீழ்த்தியுள்ளன.  சாதனை வெற்றியாக இருந்தாலும், சூப்பர்-8 வாய்ப்பை இழந்த நியூசிக்கு அது ஆறுதல் வெற்றி யாக அமைந்தது. தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நியூசி தனது மற்றொரு ஆறுதல் வெற்றிக்காக நாளை பப்பூவா நியூ கினியாவை எதிர்கொள்கிறது.

The post ஆறு ஓவரில் ஆட்டம் ‘க்ளோஸ்’: நொந்துப் போன நியூசிலாந்துக்கு முதல் வெற்றி appeared first on Dinakaran.

Tags : New Zealand ,DURUBA ,DEBUT ,UGANDA ,32ND ,ICC ,MEN'S T20 WORLD CUP CRICKET MATCH ,Trinidad ,Dinakaran ,
× RELATED வரலாற்றில் 8வது முறை..பந்தே வீசாமல் கைவிடப்பட்ட டெஸ்ட் போட்டி