×

ஷேன் சாதனை சமன்

* டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றும் சாதனையை 37வது முறையாக நிகழ்த்தியுள்ள அஷ்வின், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்து 2வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த வரிசையில் இலங்கையின் முத்தையா முரளிதரன் (67 முறை) முதலிடம் வகிக்கிறார்.

* டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர்கள் வரிசையில் எம்.எஸ்.தோனியின் சாதனையை (6 சதம்) சமன் செய்துள்ள ரிஷப் பன்ட் அவருடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

* டெஸ்டில் 5+ விக்கெட் வீழ்த்திய மூத்த இந்திய வீரர் என்ற பெருமை அஷ்வின் (38 வயது, 2 நாள்) வசமாகியுள்ளது. முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிராக 1955ல் பெஷாவரில் நடந்த டெஸ்டில் வினூ மன்கட் (37 வயது, 306 நாள்) இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

* ஒரே மைதானத்தில் சதம் + 5 விக்கெட் எடுக்கும் சாதனையை 2 முறை நிகழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையும் அஷ்வினுக்கு கிடைத்துள்ளது. 2021ல் இங்கிலாந்துக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த டெஸ்டிலும் அவர் இப்படி ஆல் ரவுண்டராக அசத்தியிருந்தார்.

* ஒரே டெஸ்டில் சதம் + 5 விக்கெட் எடுத்த மிக மூத்த வீரரும் அஷ்வின் தான். முன்னதாக, 1962ல் போர்ட் ஆப் ஸ்பெயினில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த டெஸ்டில் இந்தியாவின் போலி உம்ரிகர் 36 வயது, 7 நாளில் இந்த சாதனையை படைத்திருந்தார் (172 ரன் மற்றும் 5 விக்கெட்).

* ஒரே டெஸ்டில் சதம் + 5 விக்கெட் எடுப்பது அஷ்வினுக்கு இது 4வது முறையாகும். இங்கிலாந்தின் இயான் போதம் (5 முறை), அஷ்வின் (4) முதல் 2 இடங்களில் உள்ளனர். சோபர்ஸ், முஷ்டாக் அகமது, ஜாக் காலிஸ், ஷாகிப் அல் ஹசன், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் (தலா 2 முறை) 3வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

* ஒரு டெஸ்டின் 4வது இன்னிங்சில் 5 விக்கெட் எடுப்பது அஷ்வினுக்கு இது 7வது முறையாகும். ஷேன் வார்ன், முரளிதரன், அஷ்வின் 2வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ள நிலையில், இலங்கையின் ரங்கனா ஹெராத் (12 முறை) முதலிடத்தில் உள்ளார்.

The post ஷேன் சாதனை சமன் appeared first on Dinakaran.

Tags : Shane ,Ashwin ,Australia ,Shane Warne ,Sri ,Lanka ,Muttiah Muralitharan ,Dinakaran ,
× RELATED கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு : பதில்தர ஆணை