×

செஸ் ஒலிம்பியாட் ஆடவரில் தங்கத்தை உறுதி செய்த இந்தியா: மகளிர் அணியும் சாதிக்குமா?

புடாபெஸ்ட்: ஹங்கேரி புடாபெஸ்ட்டில் நடந்து வரும் 2024ம் ஆண்டுக்கான 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஓபன் பிரிவில் முதல் முறையாக தங்கம் வென்று இந்திய ஆடவர் அணி சாதனை படைத்துள்ளது. மகளிர் அணியும் தங்கம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளது. 45வது செஸ் ஒலிம்பியாட் தொடர் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக 11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்ற வந்த நிலையில் இந்திய ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது.

மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட போட்டியில் ஆடவர் (ஓபன்) 10வது சுற்றில் இந்தியாவின் அர்ஜூன் எரிகாசி, அமெரிக்காவின் லெனியர் டோமின்குயிசை வென்றார்.குகேஷ் உலக நம்பர் 3 வீரரான ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தினார். வெஸ்லி சோவிடம் பிரக்னாநந்தாவின் தோல்வியை சந்தித்தார். லெவன் அரோனியனுக்கு எதிராக விடித் குஜராத்தி டிரா செய்தார். இதன்மூலம நம்பர் 1 அமெரிக்காவை இந்தியா 2.5-1.5 என வீழ்த்தியது. இந்தியா தற்போது 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் சீனா (17). 2வது இடத்தில் ஸ்வோவேனியா (16) உள்ளது. 11வது மற்றும் இறுதிச்சுற்றில் இந்தியா ஸ்லோவேனியாவை எதிர்கொள்கிறது. இதில் இந்தியா டிரா செய்தால் கூட முதல் இடத்தை தக்க வைத்து தங்கபதக்கத்தை வெல்ல முடியும். இதனால் கிட்டத்தட்ட இந்தியா தங்கத்தை உறுதி செய்துவிட்டது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற மகளிருக்கான 10வது சுற்றில் இந்தியா, சீனா அணிகள் மோதின. இதில் இந்தியா 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் திவ்யா தேஷ்முக் ஒரு புள்ளிகளையும், வைசாலி, ஹரிக்கா துரோணவள்ளி மற்றும் தானியா சச்சித்தேவ் ஆகியோர் தலா 0.5 புள்ளிகளை பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. இன்று நடைபெறும் இறுதி சுற்றில் இந்திய ஆடவர் அணி ஸ்லோவேனியாவையும், மகளிர் அணி அஜர்பைஜானையும் எதிர்கொள்ள உள்ளது. இதில் வென்று மகளிர் அணியும் தங்கப்பதக்கத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

The post செஸ் ஒலிம்பியாட் ஆடவரில் தங்கத்தை உறுதி செய்த இந்தியா: மகளிர் அணியும் சாதிக்குமா? appeared first on Dinakaran.

Tags : India ,Chess Olympiad ,Budapest ,women's team ,45th Chess Olympiad 2024 ,Budapest, Hungary ,Dinakaran ,
× RELATED செஸ் ஒலிம்பியாட்; 5வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி வெற்றி