×

கன்னியாகுமரி- களியக்காவிளை நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும்: தலைமை பொறியாளருக்கு திக மனு

நாகர்கோவில், ஜூன் 16: கன்னியாகுமரி- களியக்காவிளை நெடுஞ்சாலை பழுதடைந்துள்ளது, அதனை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திக வலியுறுத்தியள்ளது. இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளருக்கு திக குமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

குமரி மாவட்டத்தில் மிக முக்கிய சாலையான கன்னியாகுமரி – களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை சமீபத்தில் பெய்த மழை காரணமாக பல இடங்களில் பழுதடைந்துள்ளது. நாகர்கோவில், கோட்டார், பார்வதிபுரம், தக்கலை, மார்த்தாண்டம், குழித்துறை இன்னும் சில இடங்களில் அந்த சாலை பழுதடைந்துள்ளது.

The post கன்னியாகுமரி- களியக்காவிளை நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும்: தலைமை பொறியாளருக்கு திக மனு appeared first on Dinakaran.

Tags : Kanyakumari-Kaliakavila Highway ,Nagercoil ,Kanyakumari-Kaliakavilai ,Highways Department ,Thika Kumari District ,Vetrivendan ,Kumari ,
× RELATED சரலூர் ஆற்றங்கரை சாலையில் இணைக்கப்படாத வடிகாலால் தேங்கும் மழைநீர்