×

ஜெயங்கொண்டம் அருகே முந்திரி தோப்பில் வாலிபர் சடலம்

 

ஜெயங்கொண்டம், ஜூன் 21: ஜெயங்கொண்டம் அருகே முந்திரிதோப்பில் இறந்து கிடந்த வாலிபர் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் கீழப்பலூர் அடுத்து பாப்பாங்குளம் அருங்கால் கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் மகன் ரங்கசாமி (21). (திருமணமாகாதவர்).

கூலித் தொழிலாளியான இவர் தனது உறவினர் வீடான தேவனூர் கிராமம் இருளர் தெருவிலுள்ள கார்த்திக் என்பவரது வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வேலைக்கு செல்லவில்லை. வீட்டிற்கும் வரவில்லை. இந்நிலையில் அவரது உறவினர் கார்த்திக் ரங்கசாமியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காாத நிலையில் தேவனூர் செந்தமிழ்ச்செல்வி என்பவரது முந்திரி தோப்பில் உள்ள முந்திரி மரத்தில் யாரோ ? தூக்கிட்டு இறந்து நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்று பார்த்தபோது இறந்து போனது ரங்கசாமி என்பது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார் ரங்கசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலையா? தற்கொலையா ? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இசம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

The post ஜெயங்கொண்டம் அருகே முந்திரி தோப்பில் வாலிபர் சடலம் appeared first on Dinakaran.

Tags : Mundri Grove ,Jayangondam ,Mundritop ,Ariyalur district ,Keezhapalur ,Pappankulam ,Jeyangondam ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் பகுதி சிவன்கோயில்களில் பிரதோஷ வழிபாடு