×

திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய செயல் அதிகாரி நியமனம்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய செயல் அதிகாரி நியமிக்கப்பட்டார். ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக சந்திரபாபு பதவியேற்ற பிறகு உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வரும் 1997ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜ்ஜை சேர்ந்த ஜெ.ஷியாமளா ராவை திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரியாக நியமித்து தலைமைச் செயலர் நிரப்குமார் பிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தற்போது செயல் அதிகாரியாக உள்ள தர்மா ரெட்டியை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

The post திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய செயல் அதிகாரி நியமனம் appeared first on Dinakaran.

Tags : Tirupati Devasthanam ,Tirumala ,Tirumala Tirupati Devasthanam ,J.Shyamala Rao ,Principal Secretary ,Higher Education Department ,Chandrababu ,Chief Minister ,Andhra ,State ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயில் காணிக்கை...