×

பா.ஜவுக்கு பெரும்பான்மை இல்லை; மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும்: மல்லிகார்ஜுன கார்கே சொல்கிறார்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: தற்போதைய ஒன்றிய அரசு சிறுபான்மை அரசு. இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். கூட்டணி அரசு குறித்து மோடியே பலமுறை விமர்சனங்களை வைத்திருக்கிறார். கூட்டணி அரசு என்பது கிச்சிடி அரசு என்றும், பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி அரசு என்பது எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

அதோடு, கூட்டணி அரசில் ஆட்சியாளர்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் அவர் கூறி இருக்கிறார். இவையெல்லாம் அவர் கூறியவை. அவற்றையே நான் திரும்பச் சொல்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

The post பா.ஜவுக்கு பெரும்பான்மை இல்லை; மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும்: மல்லிகார்ஜுன கார்கே சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Modi government ,Mallikarjuna Kharge ,New Delhi ,Congress ,Union government ,Modi ,Khichdi government ,
× RELATED உ.பி. ரயில் விபத்து: பிரதமர் மோடி அரசுக்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்