×

பிச்சன்கோட்டகம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி

 

திருத்துறைப்பூண்டி, ஜூன் 15: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பிச்சன்கோட்டகம் ஊராட்சி மன்ற அலுவலகம் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. கட்டிடம் சேதம் அடைந்தை அடுத்து கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் சுசிலா மகாலிங்கம் தலைமை வகித்தார். புதிய கட்டிடம் கட்டும் பணியை ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் துவக்கி வைத்தார். இதில் ஒன்றிய பொறியாளர் வேதநாயகம், ஒன்றிய பொது பணி மேற்ப்பார்வையாளர் விஐயலெட்சுமி, ஊராட்சி துணை தலைவர் மகேஸ்வரி முருகதாஸ், ஊராட்சி செயலர் தங்கமணி, மற்றும் வார்டு உறுப்பினர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post பிச்சன்கோட்டகம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி appeared first on Dinakaran.

Tags : Orratsi Forum ,Pichankottagam Uradchi ,Thiruthurapundi ,Thiruvarur ,District ,Thiruthurapundi Union Pichankottagam Uradachi Hall Office ,New Orati Forum Office ,
× RELATED திருத்துறைப்பூண்டி தாலுகாவில் ஜமாபந்தி நாளை துவக்கம்