×

கணினி மயமாக்கும் பணி காரணமாக இன்று 501 ரேஷன் கடைகள் இயங்காது

 

திருவாரூர், ஜூன் 15: திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் 591 முழு நேர நியாய விலை கடைகள் மூலம் பொது மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த கடைகளை முழு நேர கணினிமயமாக்கல் மற்றும் முன்னோடியாக செயல்படுத்துதல் திட்டத்தில் முதற்கட்டமாக திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி தாலூக்காவில் 90 முழு நேர நியாய விலை கடைகளை தேர்வு செய்து கணினிமயமாக்கல் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது 2ம் கட்டமாக மீதமுள்ள 501 கடைகளும் கணினிமயமாக்கல் பணி துவங்கப்படவுள்ளது. அதன்படி, குடவாசல் தாலுக்காவில் 64 கடைகள், கூத்தாநல்லூரில் 60, மன்னார்குடியில் 53, முத்துபேட்டையில் 46, நன்னிலத்தில் 75, நீடாமங்கலத்தில் 45, திருத்துறைப்பூண்டியில் 32, திருவாரூரில் 71 மற்றும் வலங்கைமானில் 66 கடைகள் என மொத்தம் 501 முழு நேர நியாய விலை கடைகளை தேர்வு செய்து புதிய விற்பனை முனைய இயந்திரம் மற்றும் ஐ.ஆர்.ஐ.எஸ் ஸ்கேனர் வழங்கப்படவுள்ளது. இதனால் இன்று ஒரு நாள் மட்டும் இந்த 501 நியாய விலைக்கடைகளும் இயங்காது என பொது மக்களுக்கு தெரிவித்துகொள்ளப்படுகிறது.

மேலும் நியாயவிலை கடைகளில் கடந்த மாதத்திற்கு (மே) வாங்க வேண்டிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை குடும்ப அட்டைதாரர்கள் வாங்கவில்லை என்றால் மேற்படி இரு பொருள்களும் நடப்பு மாதத்தில் (ஜூன்) 2 பாமாயில் பாக்கெட் மற்றும் 2 கிலோ துவரம் பருப்பு என்ற எண்ணிக்கையில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post கணினி மயமாக்கும் பணி காரணமாக இன்று 501 ரேஷன் கடைகள் இயங்காது appeared first on Dinakaran.

Tags : 501 ration ,Thiruvarur ,District ,Collector ,Saru ,Thiruvarur district ,ration ,
× RELATED இடமாறுதலுக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம்...