×

கந்தர்வகோட்டை பகுதியில் இயற்கை தொழு உரமிடும் விவசாயிகள்

 

கந்தர்வகோட்டை,ஜூன் 15: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தற்சமயம் பெய்த கோடை மழையில் நிலங்களை கோடை உழவு செய்து மேலும் இயற்கை தொழு உரமிட்டு மேல் உழவு செய்ய தயாராகி வருகிறது.விவசாயிகள் கூறும்போது, நீண்ட காலமாக ரசாயன உரங்கள் போட்டு பயிர் செய்ததால் நிலத்தில் தன்மை மாறி விவசாய மகசூல் குறையும் சூழ்நிலை உருவாகிறது. தற்சமயம் கோடை உழவு செய்து நிலதை ஆற வைத்து இயற்கை தொழுஉரங்கள் போட்டு மேல் உழவு செய்து வருகிறார்கள். இவ்வாறு செய்வதால் நிலங்களில் கூடுதல் மகசூல் கிடைக்கும் எனவும் இயற்கை உரத்திற்கு விவசாயிகள் மாற வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.

The post கந்தர்வகோட்டை பகுதியில் இயற்கை தொழு உரமிடும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Kandarwakot ,Kandarvakottai ,Kandarvakottai Union ,Pudukottai district ,
× RELATED ஒன்றிய அரசு கவுரவ தொகை உடனே வழங்க வேண்டும்