×

வேதாரண்யம் அருகே வராஹி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா

 

வேதாரண்யம், ஜூன் 15: வேதாரண்யம் அருகே வராஹி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர்மேல மரைக்காடர்ஆலயத்தின் வடபுறம் அமைந்துள்ள வராஹி அம்மனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு நாள்தோறும் அம்பாளுக்கு மண்டலாபிஷேகம் துவங்கி நடைபெற்று வந்தது.

நேற்று மண்டலபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது. அம்பாளுக்கு சிறப்பு ஹேமம்காஞ்சி காமகோடி மடத்தின் அருளாசி பெற்ற சந்திரசேகர சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. பின்பு கடம் புறப்பாடு நடைபெற்று, கோயிலை சுற்றி வலம் வந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் தென்காசி ஜோகோ கம்ப்யூட்டர் நிர்வாக அலுவலர் கீர்த்திவாசன், வராஹி அம்மன் பக்தர்கள் மற்றும் கிராம வாசிகள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post வேதாரண்யம் அருகே வராஹி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Mandalabishek ,Varahi Amman temple ,Vedaranyam ,Mandalabishekam ceremony ,Varahi ,Amman ,Maraikadar temple ,
× RELATED மணக்குடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்