×

கோம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதமடைந்த கட்டிடங்களை பராமரிக்க வேண்டும்

 

தேவாரம், ஜூன் 15: கோம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதமடைந்த கட்டிடங்களை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோம்பையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில பாதுகாப்பு இல்லாத கட்டிடங்களால் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. கோம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தினமும் பண்ணைப்புரம், மேலசிந்தலைசேரி, பல்லவராயன்பட்டி, கோம்பை ஆகிய பகுதிகளில் இருந்து நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும், கர்ப்பிணிகளும் அதிக அளவில் வருகின்றனர்.

இந்நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கழிப்பறைகள், வெளிப்புறத்தில் முறையான பராமரிப்பின்றி அசுத்தமாக இருப்பதாக நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இங்கு பழைய கட்டிடங்கள் அதிகளவில் பராமரிப்பில்லாமல் உள்ளன பழைய கட்டிடத்தின் மேல் மழை தண்ணீர் நிற்பதால் இடிந்துவிழும் ஆபத்து உளளது. இதனால் இங்கு வரக்கூடிய நோயாளிகள் சிரமப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். நோயாளிகளின் நலன் கருதி பழைய கட்டிடங்களை பராமரிப்பதுடன், மிகவும் ஆபத்தாக உள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்திட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோம்பை மருத்துவமனையில் உடனடியாக கட்டிட வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள், தேனி மாவட்ட மருத்துவமனை சுகாதாரத்துறை துணை இயக்குநர்க்கு கோரிக்கை வைக்கின்றனர்.

The post கோம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதமடைந்த கட்டிடங்களை பராமரிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Gombe Government ,Primary Health Centre ,Gombai Government Primary Health Centre ,center ,Gombai ,Gompai Govt ,Primary Health Center ,
× RELATED சாலைப்புதூரில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி