×

கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

 

பட்டிவீரன்பட்டி, ஜூன் 15: பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி மகன் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கும் சக மாணவர் ஒருவருக்கும் பள்ளியில் பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இப்பிரச்னை தொடர்பாக கணேசபுரத்தை சேர்ந்த பரணி (20) மற்றும் அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த மகுடீஸ்வரன் (21), அய்யம்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் (19) கூலம்பட்டியை சேர்ந்த சியாம்சுந்தர் (19) மற்றும் சிலர் சின்னத்தம்பியின் வீட்டின் முன் வந்து நின்று தகராறு செய்தனர். மேலும், வீட்டின் மீது கற்களை வீசி கத்தியை காட்டி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதை கண்டு அப்பகுதி மக்கள் விரட்டியதால் அவர்கள் டூவீலரில் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து சின்னத்தம்பி அளித்த புகாரின் பேரில் பட்டிவீரன்பட்டி எஸ்ஐ ராம்சேட் வழக்குப்பதிவு செய்து ஒரு சிறுவன் மற்றும் மகுடீஸ்வரன், மணிகண்டன், சியாம்சுந்தர் ஆகிய 4 பேரை கைது செய்தார். பரணி உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Pativeeranpatty ,Sinnathambi ,Sidharevu ,Parani ,Ganeshapuram ,
× RELATED பட்டிவீரன்பட்டி அருகே மருதாநதி வாய்க்கால் சீரமைப்பு