×

தண்ணீர் தொட்டியில் விழுந்து மாற்றுத்திறனாளி பலி

 

திருப்பூர், ஜூன் 15: திருப்பூர் பி.என்.ரோடு கூத்தம்பாளையம் ஜேபி நகரை சேர்ந்தவர் சூர்யகுமார் (43). இவருக்கு ஒரு கை, கால் சரியாக செயல்படாததால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். ஒரு வீட்டை வாடகைக்கு விட்டு மற்றொரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று காலை வீட்டு வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் சூர்யகுமார் சடலமாக கிடந்தார்.
இதைபார்த்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தொட்டியில் தண்ணீர் எடுக்கும்போது உள்ளே தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர், ஜூன் 15: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்களில் 1433ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருகின்ற 20ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்களில் வருகின்ற 20ம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் பல்வேறு துறை சம்பந்தப்பட்ட மனுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். காலை 10 மணிக்கு அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் தீர்வாய அலுவலரால் நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்த பின்னர் உடனடியாக தீர்வு காணப்படும்.

வருவாய் தீர்வாயத்தின் போது அனைத்து துறை அலுவலர்களும் வருகை புரிவதால் இதர துறை சம்பந்தப்பட்ட கோரிக்கைகளும் உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும். அதன்படி காங்கயம் வட்டத்திற்கு வருவாய் தீர்வாயம் நடத்தும் அலுவலராக மாவட்ட ஆட்சியரும், ஊத்துக்குளி வட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலரும், பல்லடம் வட்டத்திற்கு சார் ஆட்சியரும், திருப்பூர் வடக்கு வட்டத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலரும், திருப்பூர் தெற்கு வட்டத்திற்கும் கலால் உதவி ஆணையரும், தாராபுரம் வட்டத்திற்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியரும், மடத்துக்குளம் வட்டத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும், உடுமலை வட்டத்திற்கு உடுமலை வருவாய் கோட்டாட்சியரும், அவிநாசி வட்டத்திற்கு தனித்துணை ஆட்சியரும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.

The post தண்ணீர் தொட்டியில் விழுந்து மாற்றுத்திறனாளி பலி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Suryakumar ,Koothampalayam JP Nagar, PN Road, Tirupur ,
× RELATED திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து