×

ஸ்ரீராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவிக்கு நாசாவில் ஒருவாரம் இன்டன்சிப் பயிற்சி கல்விஆலோசகர் சுப்பையா தகவல்

 

காரைக்குடி, ஜூன் 15: காரைக்குடி ஸ்ரீராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி கல்வி ஆலோசகர், முன்னாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா கூறுகையில், நாட்டின் வளர்ச்சியில் விஞ்ஞானிகளின் பங்கு மிகமுக்கியமானது அந்தவகையில் இளம் பருவத்திலேயே அறிவியல் சிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் தொடர்ந்து அறிவியல் கண்காட்சி நடத்தி வருகிறோம். கடந்த 2023ம் ஆண்டு அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்தியரான டாக்டர் மாலகோபாலின் குறள்கூடல் ெசம்மொழி அறக்கட்டளை சார்பில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் 13 பள்ளிகள் கலந்து கொண்டு தங்களின் புராஜக்ட்டுகளை சமர்ப்பித்து இருந்தனர்.

இதில் எங்கள் பள்ளி மாணவி மெய்யம்மை பயிற்சி ஆசிரியர் அருணாகாந்த் வழிகாட்டுதலில் க்யூமன் ஆடோமெசன் ரோபாட் புராஜக்ட் திட்டத்தை சமர்ப்பித்து இருந்தார். இந்த புராஜக்ட் முதல் இடம் பெற்று வெற்றி பெற்ற நிலையில், அதற்கு பரிசாக நாசா செல்லும் வாய்ப்பை வழங்கினர். தற்போது இந்த மாணவி நாசாவில் ஒருவாரம் இன்டன்சிப் பயிற்சி மேற்கொள்ள அவரது தாய் வடிவாம்பாளுடன் சென்றுள்ளார். நாசாவில் பயிற்சி பெறும் மாணவியை பள்ளியின் சார்பில் வாழ்த்துகிறோம். இதுபோல் ஒவ்வொரு மாணவர்களுக்கும் வாய்ப்புகள் பெற்றுத்தரப்படும், என்றார்.

 

The post ஸ்ரீராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவிக்கு நாசாவில் ஒருவாரம் இன்டன்சிப் பயிற்சி கல்விஆலோசகர் சுப்பையா தகவல் appeared first on Dinakaran.

Tags : Sreerajarajan ,CBSE ,NASA ,Subbiah ,Karaikudi ,Karaikudi Sreerajarajan ,CBSE School ,Vice-Chancellor ,S. Subbiah ,Sreerajarajan CBSE School ,
× RELATED இணையதளத்தில் பாடத்திட்டம் குறித்து...