×

சாயல்குடி, கடலாடி பகுதியில் ேகாயில் உண்டியல்களை குறிவைத்து தொடரும் திருட்டு: தனிப்படை அமைக்கப்படுமா?

 

சாயல்குடி, ஜூன் 15: சாயல்குடி, கடலாடி பகுதியில் கோயில் உண்டியல்களை குறிவைத்து திருடும் கும்பலை தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்ய வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சாயல்குடி அருகே உள்ள மறவர்கரிசல்குளம். இங்கு பிரசிதிப்பெற்ற வில்வநாதன் கோயில் உள்ளது. இக்கோயில் சமீபத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் ராஜகோபுரத்துடன் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனை போன்று இங்கு வைகாசி விஷாகம் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வந்து சென்றது. இதனையறித்த மர்மநபர்கள் உண்டியலில் பணம் அதிகம் இருக்கும் என நினைத்து இரவு நேரத்தில் கோயிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்தை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து கரிசல்குளம் கிராமமக்கள் சாயல்குடி போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனை போன்று கடலாடி அருகே மங்களம் ஆற்று பகுதியில் வடக்குவாசல் செல்லியம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் வந்த மர்ம நபர்கள் கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து மங்களம் கிராம மக்கள் கடலாடி போலீசில் புகார் அளித்துள்ளனர். ஊருக்கு ஒதுங்குபுறமாக உள்ள கோயில்களை குறி வைத்து உண்டியல் பணத்தை திருடும் மர்மகும்பலை பிடிக்க எஸ்.பி, தனிப்படை அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாயல்குடி, கடலாடி பகுதியில் ேகாயில் உண்டியல்களை குறிவைத்து தொடரும் திருட்டு: தனிப்படை அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Sayalkudi, Kudaladi ,Sayalkudi ,Kudaladi ,Maravarkarisalkulam ,Vilvanathan temple ,Egail ,Sayalkudi, Cuddaly area ,Dinakaran ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1.25 கோடி...