×

திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் 2ம் கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 

திருவாடானை, ஜூன் 15: திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள காலி பணியிடங்களுக்கு 2ம் கட்ட கலந்தாய்வுக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கல்லூரி முதல்வர் பழனியப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இன்னும் காலியிடங்கள் இருப்பதால் இணைய வழியாக விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தற்போது நேரடியாக விண்ணப்பம் பெற்று சேரலாம். வருகிற 19ம் தேதி முதல் விண்ணப்பங்கள் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன. அதனைப் பூர்த்தி செய்து மாணவர்கள் அளித்தால் அவற்றை ஒன்று சேர்த்து மற்றொரு கலந்தாய்வு நடத்தப்படும். 2ம் கட்ட கலந்தாய்வு 25.6.2024 அன்று நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

The post திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் 2ம் கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Government Arts College ,Thiruvadan ,Thiruvadanai ,Thiruvadan Government College of Arts and Sciences ,Palaniappan ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி...