×

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை நீக்க கோரிக்கை

 

மண்டபம், ஜூன் 15: மத்திய அரசு கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்திய பிறகு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு டெட் எனப்படும் தகுதி தேர்வை நடைமுறைப்படுத்தியது. இதில் இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு முறைகளை பின்பற்றி வருகின்றன. தமிழகத்தில் டெட் தேர்வு 2012ல் நடத்தப்பட்டது. அப்போதைய தகுதி மதிப்பெண் 90 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதுவரை தமிழகத்தில் 5 முறை டெட் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தற்போது டெட் தேர்விற்கான தேர்ச்சி மதிப்பெண் 82 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் பணிக்கு இப்போது பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட் படிப்பு மற்றும் டெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுகிறது. இதனை நீக்க வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை நீக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Central Government ,Tamil Nadu ,
× RELATED மண்டபம் மீனவர்கள் வேலை நிறுத்தம்