×

10 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்து ஓடிய கழிவுநீர்

 

மேட்டுப்பாளையம், ஜூன் 15: மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.99 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 33 வார்டுகளில் இருந்தும் பாதாள சாக்கடை திட்டம் மூலம் வெளியேற்றப்படும் கழிவுநீர் குழாய்கள் மூலமாக சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மேட்டுப்பாளையம் – சிறுமுகை சாலையில் சங்கர் நகர் பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாக்கடை கழிவுநீர் 10 அடி உயரத்திற்கும் மேலாக பீய்ச்சி அடித்து சாலையோரம் ஆறாக ஓடியது.

இந்த கழிவுநீர் சாலை முழுவதும் ஓடியதால் துர்நாற்றம் வீசியது.இதனால், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மூக்கை பிடித்தவாறே சென்றனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த நகராட்சி ஊழியர்கள் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அதன் வழியே செல்லும் தண்ணீரை உடனடியாக நிறுத்தி விட்டு உடைப்பை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் சாக்கடை கழிவுநீர் குழாய் உடைப்பது சரி செய்யப்பட்டது. இதனால், பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post 10 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்து ஓடிய கழிவுநீர் appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,
× RELATED மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில்...