×

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார வளாகம் கட்டும் பணி துவக்கம்

மேட்டுப்பாளையம்,ஜூன்20: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பெள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராசடி ஏடி காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக சுகாதார வளாகம் இன்றி அவதிப்பட்டு வந்தனர். இதனை கருத்தில் கொண்டு அப்பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.7.85 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டும் பணி நேற்று துவங்கியது. இப்பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் பிரஸ்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் சுரேந்திரன்,கவுன்சிலர்கள் சத்யா ராமகிருஷ்ணன்,ரேவதி கண்ணப்பன்,ஒப்பந்ததாரர் கிருஷ்ணசாமி,ரங்கசாமி,பத்ரப்பன், மாகாளி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார வளாகம் கட்டும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Rashadi AD Colony ,Pellepalayam panchayat ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம் ஜமாபந்தியில் 113...