×

தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

கோவை, ஜூன் 21: கோவை கூட்செட் ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் செந்தில்குமார், கோட்ட பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், அஞ்சல் நான்கு மாநில சங்கத்தின் அறை கூவலுக்கு இணங்க, டார்கெட்டை கொடுத்து டார்ச்சர் செய்யும் அஞ்சல் நிர்வாகத்தை கண்டித்தும், காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

The post தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Office ,Goodset Road ,All India Postal Employees Union ,Palanichami ,Dinakaran ,
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!