×

ராமச்சந்திராபுரத்தில் பழுதான கண்மாய் மடை விரைவில் சீரமைப்பு

விளாத்திகுளம், ஜூன்15: விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தில் வலுவான கண்மலை மடையை மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு செய்து விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். புதூர் ஊராட்சி ஒன்றியம், ராமச்சந்திராபுரத்தில் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஊர் பொது கண்மாயின் பழுதான மடையை திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு செய்தார். மேலும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 2024-25 கீழ் ₹20 லட்சம் மதிப்பில் விரைவில் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் கிராமத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை முழுவதும் அகற்றி வேப்ப மரங்களை நடுவதற்கு கிராம மக்களிடம் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், ஒன்றிய பொறியாளர் ரவி, விஏஓ விமல், ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி, துணைத்தலைவர் சுப்புலட்சுமி, கிளைச்செயலாளர் கோசலைராமன், கிளை பிரதிநிதி காந்தி, விளாத்திகுளம் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தர் உட்பட கிராம பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

The post ராமச்சந்திராபுரத்தில் பழுதான கண்மாய் மடை விரைவில் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Ramachandrapuram ,Vlathikulam ,Markandeyan MLA ,Kannamalai Lagoon ,Putur Uratchi Union ,Panthana ,Kanmai ,Mada ,
× RELATED ரூ.10,000 லஞ்சம் ; பெண் தாசில்தார் கைது