×

பணி நிறைவு பாராட்டு விழா

நெல்லை, ஜூன் 15: புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 29 ஆண்டுகள் முதுகலை தொழிற்கல்வி ஆசிரியராக பணியாற்றிவர் சங்கர் சீனிவாசன். 38 ஆண்டுகள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றதையடுத்து பள்ளியில் பிரிவுபசார பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஷாஜஹான் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை ஜெயக்குமாரி வரவேற்புரையாற்றி, ஆசிரியர் சங்கர் சீனிவாசன் பள்ளிக்கு செய்த பணிகளான கழிப்பறை கட்டி கொடுத்தது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தந்தது போன்றவற்றை எடுத்துரைத்தார். நெல்லை பரோடா வங்கி மேலாளர் சிவசங்கர், கடையநல்லூர் கனரா வங்கி உதவி மேலாளர் குமுதமாலினி, ஹிதாயத்துல்லா பள்ளி தலைமை ஆசிரியர் அல்ஆமீன், ஆடிட்டர் சுடலைமுத்து, ஆசிரியர்கள் பீட்டர், குருபாக்கியம். முஹைதீன் பாத்து, தனசேகரன், கண்ணன், கோகுல மாதவி, பாலசுப்பிரமணியன், கிருஷ்ணகுமாரி, முருகாம்பிகை, பரமசிவன், இந்திரா ஆகியோர் பாராட்டி பேசினர். பள்ளி சார்பில் ஆசிரியருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் சங்க செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

The post பணி நிறைவு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Nellai ,Shankar Srinivasan ,Puliangudi Government Boys Higher Secondary School ,Dinakaran ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்