×

ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல், ஜூன் 15: நாமக்கல் மாவட்டத்தில் இன்று 8 இடங்களில் ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின் மக்கள் குறைதீர் நாள் முகாம், இன்று (15ம்தேதி) காலை 10 மணி முதல் 1 மணி வரை, நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் ஆகிய 8 தாலுகா அலுவலகங்களில் உள்ள, வட்ட வழங்கல் பிரிவில், வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு, பொது விநியோகத் திட்டம் மற்றும் ரேஷன்கார்டு சம்மந்தமான குறைகளை தெரிவித்து தீர்வுசெய்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal district ,District Collector ,Uma ,Grievance Day ,Public Distribution ,Ration ,Grievance ,Camp ,Dinakaran ,
× RELATED இலவச தையல் இயந்திரம் பெற பதிவு செய்ய அழைப்பு