×

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

தேன்கனிக்கோட்டை, ஜூன் 15: தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், போதை பொருள் தடுப்பு மற்றும் போக்சோ விழிப்புணர்வு முகாமில் டிஎஸ்பி சாந்தி கலந்து கொண்டு பேசினார். தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், போதை பொருள் தடுப்பு மற்றும் போக்சோ வழக்கு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. டிஎஸ்பி சாந்தி தலைமை வகித்து மாணவ, மாணவிகளிடையே போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போக்சோ வழக்கு குறித்தும், மாணவர்களின் கல்வியின் அவசியத்தை குறித்தும் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் எஸ்ஐ பட்டு அன்புக்கரசன், அனைத்து மகளிர் காவல்நிலைய எஸ்ஐ பாஞ்சாலி, எஸ்எஸ்ஐ காளியப்பன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : prevention awareness ,Dhenkanikottai ,DSP ,Shanthi ,Govt Boys High School ,Girls ,High School ,Dhenkanikottai Government Boys High School and Girls High School ,Drug Prevention Awareness Camp ,Dinakaran ,
× RELATED டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி