×

14 ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கோவில்தேவராயன்பேட்டை கிராமத்தில் மச்சபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகில் ஆபிசர்நகர் பகுதியை சேர்ந்த முகமதுபைசல் (43) என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வருகிறார். நேற்று காலை வீடு கட்டுவதற்காக 3 அடிக்கு 2 குழிகள் தோண்டப்பட்ட நிலையில் மூன்றாவது குழி தோண்டும்போது முதலில் பண்டைய கால ஒரு ஐம்பொன் சிலை கிடைத்தது. அதனைத்தொடர்ந்து மேலும் பள்ளம் தோண்டும்போது அடுத்தடுத்து சுவாமி சிலைகள் கிடைத்தது.

தகவலறிந்டுஹ் தாசில்தார் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பகுதி முழுவதும் பள்ளம் தோண்டினர். அப்போது சோமாஸ்கந்தர், திருஞானசம்பந்தர், சந்திரசேகரன், திருநாவுக்கரசர், விநாயகர் உள்ளிட்ட 14 ஐம்பொன் சுவாமி சிலைகளும், பூஜைப் பொருட்களும் கிடைத்தது. அனைத்து சிலைகளும் ஒரு அடி முதல் 3 அடி வரை இருந்தது. இதனைத்தொடர்ந்து 14 சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை பாபநாசம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

 

The post 14 ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Aimbon Sami ,Machapureeswarar Temple ,Kovildevarayanpet ,Thanjavur district ,Papanasam circle ,Mohammad Faisal ,Officer Nagar ,
× RELATED தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே...