×

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடும்: பாஜ தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக போட்டியிடும் என்று பாஜ தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிட போகிறதா, பாஜ போட்டியிட போகிறதா என்ற பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக, பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபடுவோம். வெற்றி பெறுவோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடும்: பாஜ தலைவர் அண்ணாமலை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Annamalai ,Chennai ,president ,National Democratic Alliance ,Vikravandi ,Dinakaran ,
× RELATED இன்று பாஜக மையக்குழு கூட்டம்