×

1 முதல் 12ம் வகுப்பு வரை 76 ஆயிரம் பேருக்கு விலையில்லா பாடநூல்

*பள்ளி திறந்த முதல் நாளே வழங்கப்பட்டது

கரூர் : 1 முதல் 12ம் வகுப்பு வரை 76,062 மாணவர்களுக்கு பள்ளி திறந்த முதல் நாளே இலவச பாடநூல், குறிப்பேடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களின் பெற்றோர் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு முதல்வர், பொறுப்பேற்றது முதல், பள்ளிக் கல்வித்துறையில் தனிக் கவனம் செலுத்தி நிதிநிலை அறிக்கையில் அதிகளவு நிதிகளை ஒதுக்கி மாணவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

அனைத்து திட்டங்களும் சிறப்பான திட்டங்களாகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், முத்தாய்ப்பாக, அதிகாலை வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் பிள்ளைகள் பட்டினியுடன் பள்ளிக்கு வரக்கூடாது என்ற உயரிய நோக்கில் தொடங்கப்பட்ட காலை உணவுத் திடடம்.இந்த திட்டத்தின் காரணமாக, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், இந்த திட்டம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

புதுமைப் பெண் திட்டம், தமிழ புதல்வன் திட்டம், நான் முதல்வன், கல்லு£ரி கனவு, இல்லம் தேடி கல்வி, வானவில் மன்றம், பயிலும் பள்ளியிலே ஆதார் சேவை மையம், மாணவன் மனசு, தேன் சிட்டு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு இலவச பாடநூல் மற்றும் குறிப்பேடுகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு அனைத்து பாடநூல்களும் அனைத்து வகையான குறிப்பேடுகளும், ஓவிய பயிற்சிக்கான கையேடு, தமிழ் மற்றும் ஆங்கில கையெழுத்து பயிற்சிக்கான கையேடுகளையும் வழங்கியுள்ளது.

இதே போல், 9, 10, 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான தமிழ் மற்றும் ஆங்கில வழி முதல் தொகுப்பு இரண்டாம் தொகுப்பு பாட புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களிலும், அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் என 751 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் செயல்பட்டு வருகிறது இதில், யூகேஜி, எல்கேஜி மற்றும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 38812 மாணவ மாணவிகள் கல்வி கற்று வருகிறார்கள். இதே போல், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 130 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளிகளில் மொத்தம் 37250 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு கோடு நோட்டுக்கள், 4 கோடு நோட்டுக்கள், 80 பக்கம் மற்றும் 196 பக்க நோட்டுக்கள், ரெக்கார்டு நோட்டுக்கள், கலவை நோட்டுக்கள், அட்லஸ் வரைபடம் வழங்கப்பட்டுள்ளது.ஓவிய நோட்டுக்கள், கணித உபகரண பெட்டிகள், புத்தகப்பை, கிராப் வரைபடம், வண்ண சீருடைகள், மாணவ, மாணவிகளுக்கான காலனிகள் மற்றும் சாக்ஸ் தரப் பரிசோதனை முடிந்து விரைவில் வழங்கப்படவுள்ளது.இதற்காக அனைத்து மாணவ, மாணவிகளும் தமிழக முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 1 முதல் 12ம் வகுப்பு வரை 76 ஆயிரம் பேருக்கு விலையில்லா பாடநூல் appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur District Administration ,Dinakaran ,
× RELATED கரூர்- திருச்சிராப்பள்ளி ரயில்வே...